விலைரூ.30
புத்தகங்கள்
Rating
பக்கம்: 90
குழந்தைகளுக்கு பெயரிடுதல், திருமணம் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளும் வேதாகம முறைப்படி, சைவர்களின் இல்லங்களில் திகழ வேண்டும். அது காலம் காலமாக உள்ள நடைமுறையும் கூட.வேத மூலமந்திரங்களை அருளியவர் சிவ பெருமான். வேதம் எழுதாக் கிளவி. வடமொழியும், தமிழும் சிவன் அருளியது. தேவாரப் பனுவல்கள் வேத சாரங்கள் . இப்படி பல கருத்துக்களுக்கு, தமிழ் இலக்கிய ஆதாரங்களுடன், இந்த நூலில் தரப்பட்டிருப்பது சிறப்பாகும்.
அந்தண வருணத்தை தொல்காப்பியம் காட்டும் பகுதி (பக்கம் 5) தொல்காப்பியம் காட்டும் திருமண முறைகள், சுந்தரர் திருமணத்தின் சைவ நெறிக் கோட்பாடு என, பல தகவல்கள் படிக்க சுவாரஸ்யமானவை.
சங்க நூல்கள் துவங்கி, பெரிய புராணம் வரையிலான இலக்கியங்கள், காப்பியங்கள் காலத்தில் இல்லச் சடங்குகள் அனைத்தும், வைதிக நெறியிலேயே நடந்தன என்பதற்கான ஆதாரங்களை, இந்த நூலில் அதிகம் காணலாம்.தெளிவு மிக்க கருத்துகளை கொண்ட நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!