விலைரூ.90
புத்தகங்கள்
Rating
பக்கம்: 192
வியாக்ரபாதர் என்னும் முனிவரால் உருவாக்கப்பட்ட திருத்தலம் திருப்பட்டூர் சிவத்தலம். வில்வ மரத்தில் ஏறி வில்வ இலைகளைப் பறித்து, சிவலிங்கத்தை வழிபடுவதற்கு வசதியாக, இறைவனிடம் புலிப்பாதம் வேண்டி, வியாக்ரபாதர் தவம் செய்த இடம்தான் இது. வியாக்ர என்னும் சொல் புலியைக் குறிக்கும். பாதம் புலியின் பாதத்தை உணர்த்தும்.திருப்பட்டூரில் அமைந்துள்ள திருக்குளம், புலிப்பாதத்தின் வடிவில் அமைந்திருக்கும் அற்புதம். பாம்பாக மாறிய பதஞ்சலி முனிவர், பாம்பாக இருந்து பதஞ்சலியாக மாறிய அவரது வரலாறு என, இறை அற்புதமாக விவரித்துச் சொல்கிறது இந்த நூல். எளிய நடையில் அமைந்துள்ளது நூலின் சிறப்பு.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!