விலைரூ.195
முகப்பு » கட்டுரைகள் » Cement Uncements
புத்தகங்கள்
Rating
இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட் கம்பெனி நிறுவனர் தொழிலதிபர் சங்கரலிங்க அய்யர். அவர் மகன்கே.எஸ்.ராமன் அந்த நிறுவனத்தின் ஜெனரல் மானேஜராக பணியாற்றி சிறப்பித்தவர். அவர் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள், குடும்ப பாசங்களால் ஏற்பட்ட பிரச்னைகள், ஆகியவற்றை ஆசிரியர் தனக்கே உரிய சிறந்த ஆங்கில நடையில் ஆக்கியுள்ளார். ஆசிரியரின் பன்முகப் பார்வை, இந்த நூலை சிறப்பாக ஆக்கியிருக்கிறது.
அக்கருத்துக்களை பதிவு செய்யும்போது, "தம்பி உடையான் படைக்கஞ்சான் போன்ற தமிழ்ப் பழமொழிகளை இணைத்திருப்பது, ராமனின் வீட்டுப் பெண்கள், தொழிலில் பிரச்னை ஏற்பட்ட காலத்தில், அதைப் பற்றி அதிகம் அறியாமல், தோளை உலுக்கி கடவுள் இருக்கிறார் என்ற சமிக்ஞை காட்டியது போன்ற தகவல்களும், கம்பெனி மீது ஊழியர்களுக்கு இருந்த பாசம் எப்படி என்றும், பல்வேறு தகவல்கள் சிறப்பாக தரப்பட்டிருக்கின்றன. குடும்ப பிசினஸ் நடைமுறையை விளக்கும்போது தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், பழைய டில்லி பகுதியில் ஒரு கடையில் விசாரித்த அனுபவத்தையும், தகவலாக எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த நூல் பல பரிமாணங்களை கொண்டிருக்கிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!