அழியா அழகான இயற்கைக்கு அணி சேர்ப்பது பறவையினம். மொபைல் டவர் பாதிப்பால், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதாக பேசுகிறோம். சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நமது வாழ்வில், அழகான பறவைகள் பற்றி அறிய இந்த நூல் உதவிடும். பைனாகுலர் கையில் இருந்தால், தூரத்தில் உள்ள பறவைகளையும் பார்த்து மகிழலாம். ஆனால் அதன் வண்ணம், சிறகுகளின் சிறப்பு, அலகுகள், அதன் பெயர், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கின்றனர், தமிழகத்தில் எங்கே அவைகளை காணலாம் என்ற பல கேள்விகளுக்கு விடை தருவது இந்த நூலின் சிறப்பாகும்.
பறவையின் வண்ணப்படத்துடன், இத்தகவல்களும், வழுவழு தாளில் வண்ணக்கலவையுடன் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் முயற்சி பாராட்டுதற்குரியது. பதினொரு
ஆண்டுகளுக்கு பின், இரண்டாம் பதிப்பாக நூல் அமைந்த போதும், இன்றைய இளைய தலைமுறையினர் இந்த நூலை ஆர்வத்துடன் வாங்கி பயனடையலாம்.
பாண்டியன்