மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆசிரியர், கோவை பாரதியார் பல்கலையில், உளவியல் முதுகலைப் பட்டம் படித்தவர். இவர், இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மருத்துவமனை ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இவரது இளவயதில் பெற்றோர் சிந்திய கண்ணீர் ஏராளம். ஆனால், இவருக்கு கிடைத்த பெண் ஆசிரியர்கள், கணினி உதவி, அத்தை, பாட்டி என்ற உறவினர் அனைவரும் இவரை நேசத்துடன் வளர்த்த பாங்கு, இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
மாற்றுத் திறனாளியாக இருந்து, சமூக அந்தஸ்தை பெற்ற இந்த இளைஞரது முயற்சி, மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும். அன்பு சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தால், முன்னுக்கு வரலாம் என்பதற்கு இவர் வாழ்க்கை ஓர் அடையாளம். அதற்கு இவரது இந்த சுயசரிதை நிச்சயம். ஒரு முன்னோடியாக அமையும் என்றால் மிகையாகாது.