சாகித்ய அகாடமி விருது பெற்ற, வரலாற்று இசை ஞானப் புதினம் இது. கதையின் நாயகி, குறிஞ்சி பிறப்பால் புலைச்சியாயினும், பிறவி இசை மேதை. மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடும் உறுதி. சமஸ்தானங்கள், ஜமீன்தாரர்கள், கலெக்டர்கள், வெள்ளைக்கார துரைகள் முதலியோர் ரசிப்பதற்காக, அவர்களுக்காக பாட மாட்டேன் என்ற வைராக்கியம், நம்மை பிரமிக்க வைக்கும்.
கலைகளை வளர்த்த, தஞ்சை சரபோஜி மன்னரே, அவளைக் காதலிக்கிறார். பின், தன் மகன் சிவாஜியும், அவளை காதலிப்பது அறிந்து, ஒதுங்கிக் கொள்ள அதிக சூடுபிடிக்கிறது கதையின் போக்கு. நாவலின், ஒவ்வொரு அத்தியாயமும், ஒரு ராகத்தின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இசை நுணுக்கம் தெரிந்த, ரசிக பெருமக்கள் இன்னும் கூடுதலாக, இந்நூலை ரசிக்கலாம்.
சிவா