ஜனரஞ்சகமான கதைகளில் எழுதிவரும் சுப்ரஜா, ஒரு சுவாரஸ்யமான கதாசிரியர். வார்த்தைச் சிக்கனம், அந்தச் சிக்கனமான வார்த்தைகளுக்கும் ஒரு வசீகரம்; கவர்ச்சி. மிக ஆழமான கதைக் கருவை லகுவாகக் கையாளும் எழுத்துத்திறன். ‘ஐம்பது காசு’ என்ற கதையும், ஸ்டார்ட், ஆக்ஷன் கதையும் இவரது கதை எழுதும் நேரத்திற்கு கட்டியம் கூறுபவை. அமரர் சுஜாதாவின் சிஷ்யர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன இவரது எழுத்து நடை. ஜனகன்