சிறுகதைகள் மீது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் எப்போதும் ஈர்ப்பு குறைந்து போனதில்லை. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும் போது, ‘ஒரு ஊர்ல... ஒரு ராஜா இருந்தாராம்’ என்று தான் பெரும்பான்மையான கதைககளின் துவக்கம் இருக்கும். இதை நம் வாழ்விலும் அனுபவித்திருப்போம்.
கன்னிக்கோவில் இராஜா எழுதியுள்ள ‘ஒரு ஊர்ல... ஒரு ராஜா! ராணி!’ சிறுகதை தொகுப்பில் இதுபோன்ற ஒரு கதையும் இடம் பெற்றுள்ளது. அதையே தொகுப்பிற்கு தலைப்பாகவும் வைத்துள்ளார். இதில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறுகதைகளும் சிறுவர் கதைகள். சிறுவர் இலக்கியம், வளரும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பெரிய பங்களிப்பை செய்பவை. ஒவ்வொரு சிறுகதைகளும் நற்பண்புகளையும், நல்லுணர்வுகளையும், வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் ‘ஒரு ஊர்ல... ஒரு ராஜா! நல்ல தொகுப்பாக, ஓவியங்களுடன், வெளிவந்துள்ளது. சாகித்ய அகாதெமி விருதுபெற்ற ம.இலெ.தங்கப்பா முன்னுரை வழங்கியுள்ளார்.
சு வின்