மனிதர்களது வளர்ச்சிக்கு வானமே எல்லை. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு ரசித்து, லயித்து வாழ வேண்டும், ஒவ்வொரு விநாடியையும் எவ்வாறான கட்டுமானத்தோடு அமைத்துக் கொள்ள வேண்டும், முக்கியமாய் இந்த விநாடியை எப்படி நிறைவு செய்ய வேண்டும் என்பனவற்றை ஒரு ஆசிரியராக, ‘இந்த விநாடி‘ என்ற நூலில் சொல்லியிருக்கிறார், நாகூர் ரூமி. சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் அவர் குருநாதர் அவருக்குச் சொன்னவை. சொன்னவிதம் அவருக்கு சொந்தமானாலும், சொல்லப்பட்டவை யாவும் அனைவருக்கும் சொந்தம்.
வயது வித்தியாசமின்றி, ஆண் பெண் பேதமின்றி யார் வேண்டுமானாலும் இதில் சொல்லப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
‘மூச்‘சில் துவங்கி, ‘தற்செயலா தெய்வச்செயலா’ என்று கேட்பது வரை, எட்டு அத்தியாயங்களில், மனிதர்கள் தமது ஒவ்வொரு கணத்திலும் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளை வாழ்வியல் உதாரணங்களோடு தந்துள்ளார் நூலாசிரியர். இன்றைய வேகமான பிரஷரான சூழலுக்கு, ‘இந்த விநாடி’ படிக்க வேண்டிய நூல்.
– ஸ்ரீநிவாஸ் பிரபு