முகப்பு » ஆன்மிகம் » மெய்ப்பொருள் காண்பது

மெய்ப்பொருள் காண்பது அறிவு (ஸ்ரீசாலை ஆண்டவர்களின் வாக்கும் வரலாறும்)

விலைரூ.85

ஆசிரியர் : கே.நிறைமதி அழகன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘மெய்வழிச்சாலை’ என்பது, எம்மதமும் சம்மதம் எனும் ஒரு  மார்க்கம். பல சமய நெறிகளைப் பின்பற்றி, உருவ வழிபாட்டை மறுக்கிறது  மெய்வழிச்சாலை. கடந்த, 1922ம் ஆண்டு, காதர் பாட்சா என்பவர் ஆரம்பித்து வைத்த  மார்க்கம் இது. இதை ஸ்தாபித்தவரை, ‘சாலை ஆண்டவர்’ என, மெய்வழி அன்பர்கள்  அழைக்கின்றனர். பல்வேறு அதிசயங்களைச் செய்த சாலை ஆண்டவர், பிறப்பால்  இஸ்லாமியராக இருந்தாலும், ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின்  தத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியவர். இவரிடம் தீட்சை பெற்றவர்கள்,  ‘அனந்தர்கள்’ என, அழைக்கப்படுகின்றனர்.
மிக எளிய வாழ்வு வாழ்ந்து, 120 வயது வரை பல  அனந்தர்களுக்கு தீட்சை தந்து, பின் ஜீவசமாதி அடைந்தவர், சாலை ஆண்டவர்.
கரூர்  மாவட்டம், மார்க்கம்பட்டி என்ற கிராமத்தில், வேளாண்மை தொழில் செய்து வந்த,  ஜமால் ஹுசேன் என்பவருக்கு மகனாய் பிறந்த இவர், சிறிய பருவத்திலேயே  மரணத்தை வெல்வது எப்படி என்று தேடி அலைந்திருக்கிறார்.
இவருக்கு எந்த  குருவும் வாய்க்கவில்லை. எனினும், மனம் தளராது, ‘வாசி’ என்னும் அடயோகத்தைப்  பயின்று வந்திருக்கிறார். ஒருபுறம் ஞான மார்க்கத்தில் ஈடுபட்டிருந்தாலும்,  உலகியல் வாழ்விற்கு, தம் பக்கத்து ஊரான தாசுக்காரன்பாளையத்தில் ஒரு நெல்  மண்டி வியாபாரத்தை துவங்கி, அதை நாணயமாக நடத்தி வந்தார்.
 அப்போது, வியாபார ரீதியில் இவருடன் கூட்டுச் சேர்ந்தவர் யார் தெரியுமா? ஈ.வெ.ரா.,வின் தகப்பனார் வேங்கிடப்ப நாயக்கர். இருவரும் கூட்டு  வியாபாரம் நடத்தி, ரங்கூனிலிருந்து நெல் இறக்குமதி வாணிகம் செய்தனர். அந்தக் காலக்கட்டத்தில், இவர் செய்து வந்த ‘வாசி யோகம்’ தவறானது என்று  சுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்தி தனக்கு சீடராக ஏற்றுக் கொண்டார், அரபு  தேசத்திலிருந்து வந்த தணிகை மணிப்பிரான் எனும் ஞானி. இதன் பின்னர்  படிப்படியாய் ஞான மார்க்கத்தில் இவர் அடைந்த முன்னேற்றங்களையும், நடுவில் இவருக்கு ஏற்பட்ட பல்வேறு துன்பங்கள், எதிரிகளின் சூழ்ச்சிகள்  ஆகியவற்றையும் ஆசிரியர் மிக விவரமாக எழுதியிருக்கிறார். 1976ம் ஆண்டு,  பிப்ரவரி, 12ம் நாள் ஜீவசமாதி ஆனார். மிக எளிய நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில்  எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
மயிலை சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us