சமஸ்கிருஸ்த மொழியில் அமைந்துள்ள நூல் இது. வேதங்கள் இந்த நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் ஆவணம். காலம்காலமாக போற்றப்படும் வேதத்தின் ஒரு பகுதியான, கிருஷ்ண யஜுர் வேத தைத்ரியச் சிறப்புகளை விளக்குகிறது, இந்த நூல்.
தைத்ரிய யஜுர்வேதத்தில் உள்ள சம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம், மந்திரபிரச்னம், அனுவாகம் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள், அவற்றில் கூறப்பட்டுள்ள, யாஜ்யா, ப்ரோநுவாக்யா போன்ற மந்திரங்களின் விவரங்கள், பிரதீகம் என்ற மந்திரங்கள் மற்றும் அவற்றின் அகரவரிசைப் பட்டியல், க்லுப்தம், ரங்கலுப்தம் என்னும் ஸ்வரங்களின் விவரங்கள், இவற்றில் காணப்படும் இரட்டைக்கிளவி சொற்கள் ஆகியவை அழகுற தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுப்பை வெளியிட, பல ஆண்டுகளாக கடினமாக உழைத்த நூலாசிரியரின் முயற்சியைப் பாராட்டி, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள், ஆசி வழங்கி நூலை வெளியிட்டிருக்கிறார். அது ஒன்றே, இதன் சிறப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
சமஸ்கிருதம் மற்றும் வேத அறிஞர்கள் கையில் இருக்க வேண்டிய நூல் இது.
பாண்டியன்