எவ்வித பிரச்னையையும் தீர்க்க, புதிய கோணத்தில் சிந்தியுங்கள் என, அறிவுறுத்தும் புத்தகம். அதை, அறிவுரையாக கூறி தெவிட்டாமல், நண்பனாக வாசகனோடு, நூலாசிரியர் பேசுகிறார்.
புராணங்கள், கணிதம், நாட்டுப்புற கதைகள், மேல்நாட்டு கதைகளில் உள்ள புதிர்கள் மூலம், நம்மை கட்டுரைக்குள் இழுக்கும் லாவகம், ஆசிரியருக்கே உரியது. மொத்தம், 40 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
குழு ஒற்றுமையை விளக்கும் ஆசிரியர், ‘சீனர்கள், தாங்கள் கண்டுபிடித்த காகிதம், அச்சு, திசைக் காட்டும் கருவி, வெடி மருந்து போன்றவற்றை, ரகசியமாகவே வைத்தனர்; ஆனால், அவர்கள் கணினியையோ, ஆகாய விமானத்தையோ, அலைபேசியையோ கண்டுபிடிக்கவில்லை. காரணம், அவர்கள் மூடிய சமூகமாக இருந்தது தான்’ என்கிறார்.
இசையில் மாற்றி யோசித்தவர்கள், இலக்கியத்தில் மாற்றி யோசிக்க வைத்தவை, மரணத்திலும் மாற்றி யோசித்தவர்கள் கதை கூறி, நமக்கு தன்னம்பிக்கை அளிக்கிறார். கதையும், புதிர்களும் நிறைந்திருக்கும் தன்னம்பிக்கை கட்டுரைகள்!
சி.கலாதம்பி