ஏழ்மையில் இருந்த மேனகா, எதிர்பாராத விதமாக நடிகையாகி விடுகிறாள். ஹரி கிருஷ்ணா என்ற டாக்டரை அவள் நேசிக்கிறாள். மேனகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது, அவளைக் காப்பாற்றியவர் ஹரிகிருஷ்ணா. ஆனால், சந்தர்ப்ப வசத்தால் ஹரி, ரேகா என்ற பெண்ணை மணக்கிறான். ரேகா ஒரு லட்சிய மனைவி அல்ல; ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவள். ஹரியை உதாசீனம் செய்கிறாள். ஹரி ஒரு பரோபகார டாக்டர். தான் சம்பாதிக்கும் பணத்தை, ஏழை, எளிய மக்களுக்கு செலவு செய்ய விரும்புகிறார். ஆனால் ரேகாவோ, எல்லாப் பணத்தையும் தனக்கே ஹரி தர வேண்டும் என்று போராடுகிறாள். மேனகா, திரை உலகில் பிரபலம் ஆன பிறகு, அவள் தந்தை சொந்தம் கொண்டாடி, அவள் வீட்டிற்கு வந்து போகிறார். அவர் ஆரம்பத்தில், மேனகாவைப் புறக்கணித்தவர். மோசமான தந்தையின் போலித்தனமான பாசம், மேனகாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஹரி மன நிம்மதிக்காக, அமெரிக்கா சென்று செட்டில் ஆகிறான். மேனகாவோ, ஹரி இந்தியாவில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். என்ன நடந்தது? இந்த இனிய நாவலை அவசியம் படித்துப் பாருங்கள். கவுரி கிருபானந்தனின் தமிழ் மொழிபெயர்ப்பு அருமை. இனிய முடிவு மனதிற்கு நிறைவு.
எஸ்.குரு