இந்தச் சிறிய நாவல், ரத்தமும் சதையுமாகப் பல மனித நாடகங்களைப் பதிவு செய்கிறது. பேருந்து, பேருந்துப் பயணம், கண்டக்டர், டிரைவர், பேருந்தில் பயணிப்போர் என்று பல நிலைகளில் பல பதிவுகள்.
‘எண்ணில் அடங்கா மனிதர்கள். அவரவருக்கு அவரவர் பிரச்னை. இவர்களுக்கு இடையில் கண்டக்டர் நீந்திக் கொண்டும், மிதந்து கொண்டும், மூச்சுத் திணறிக் கொண்டும் நகர்ந்து டிக்கெட் போட வேண்டும். சதா எதையேனும் கத்திக் கொண்டே தனது சக்தியை எல்லாம் காற்றில் கொட்டிக் கொண்டு டிக்கெட் போடும் அவரைப் பார்த்தால் ரொம்பப் பரிதாபமாக இருக்கும்’ என்று கண்டக்டர்களுக்காக உருகுகிறார் ஹரணி. பேருந்தில் ஆடு அடிபட்டுச் சாவது, ஆள் அடிபட்டுச் சாவது எல்லாம் உண்டு. தமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்பாளி ஹரணி. எளிமையும், யதார்த்தமும் நிரம்பி வழியும் பொருண்மைகள் இவரது படைப்புக் களம். பயணம் வாழ்வின் குறியீடு. அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது.
எஸ்.குரு