இந்த நூல், திருமலை திருப்பதி கோவில் குறித்த அத்தனை செய்திகளையும் மிக அருமையாகத் தொகுத்துக் கூறுகிறது. பிள்ளைப்பெருமாள் ஐயங்காருக்கு, பெருமாள், கண்டமாலை என்ற நோய் கொடுத்த பின்னரே, அவர், ‘திருவேங்கடமாலை’ என்ற சிற்றிலக்கியம் பாடினார் (பக். 77), மானுட உறுப்புகளை ஆலயப் பிரிவுகளுடன் ஒப்பிடுவது( பக். 95), உற்சவம் என்ற வடசொல்லுக்கு, ‘துன்பக்கடலைப் போக்குவது என்ற விளக்கம் (பக். 169), வேங்கடவன் நெற்றியில் சாத்தப்படும் பச்சைக் கற்பூரம் 750 கிராம் எடை (பக். 194), திருமங்கையாழ்வார் காலத்தில் முதன்முறையாக அவரால் கிரயப்பத்து உற்சவம் துவங்கப்பட்டது (பக். 222), லட்டு, வடைகளின் விவரம் (பக். 284), இறைவன் முகவாயில் பச்சைக்கற்பூரம் வைக்கப்படும் வரலாறு (பக். 340) என, சுவாரசியமான தகவல்கள் இந்த நூலில் அடங்கி உள்ளன.
திருமலை புனித யாத்திரையை இனிதாக்குவது எப்படி, மலையில் செய்யத்தக்கன, தகாதன ஆகிய கட்டுரைகள் முக்கியமானவை.
-டாக்டர் கலியன் சம்பத்து