சாகித்திய அகாடமி விருது பெற்ற மராத்தி மூல நூலாசிரியர் ஆஷா பகேயின் பூமி எனும் நாவலின் தமிழாக்கமே இந்நூல். தமிழக, கடலூர் மாவட்ட கடலோரக் குடும்பத்தில், இந்து தந்தைக்கும், கிறிஸ்தவ தாய்க்கும் பிறந்த ஒரு சிறுமி, சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பள்ளிப் பருவத்திலேயே தாயையும் இழந்து தனிமையாகிறாள். நிராதரவாக நிற்கும் அவளை, அவளது அத்தை மும்பைக்கு தன்னோடு அழைத்துச் சென்று, படிக்க வைத்துக்
கரையேற்றுகிறாள்.
தந்தையில்லா பெண்ணாக, அவளது பிஞ்சுப் பருவ மனக்கிலேசங்கள், குமுறல் கள், தாயின் துணையில்லாமல் அவளது மனக் கொந்தளிப்புகள், படிப்பில் ஏற்படும் தோல்விகள், பிற்பாடு அத்தையின் அன்பில் அவளுக்கு கிடைக்கும் முன்னேற்றங்கள், பற்றுக்கோடு தேடி அலைபாய்கையில் கிட்டும் கசப்புகள், திருமண வாழ்வில் வரும் விரக்திகள் என, எல்லாவற்றையும் வெளிப்படுத்தி எடுத்துச் செல்லும் நுட்பமான கதைக்களங்கள் பாராட்டப்பட வேண்டியவை.
இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பி.ஆர்.ராஜாராம். படிப்பில் சிறந்து, வாலிபப் பருவத்திலேயே சிறுவர் இலக்கியங்களை எழுதுமளவு முன்னேறுகிறாள்.கூடவே, கல்லூரி நாடக நண்பர்கள் அறிமுகமாகி ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்தும் பெயர் பெறுகிறாள்.
ஆண், பெண் நட்பு வட்டம் விரிவாகும் ஒரு முற்போக்கான சூழலில் ஏற்படும் மன உறுதி, விடாமல் சலனப்படுத்தும் காதல் தோல்வி, அங்கங்கு அனுபவமாகும் பாலியல் அத்துமீறல்கள், வழியில் வரும் குறுக்கு உறவு மனிதர்கள், கலப்புத் திருமணப் பெற்றோர் என்பதால் ஏற்படும் திருமணத் தடை போன்ற எல்லாமே, உணர்ச்சிக் களங்களாய் திரைக்கதையாய் எடுத்துச் செல்லப்படுகின்றன.
எத்துணை அளவு மனதளவிலும், அறிவிலும் முன்னேறிச் சென்றாலும், தனித்தன்மையோடு தனித்து நிற்கும் ஒரு பெண்ணுக்கு, சிற்சில கலாசார பிற்போக்குகளால் ஏற்படும் பின்னடைவுகள், பதிவாகி உள்ளன.
முடிகிறது. பிற்பாடு திருமணம் கைக்கூடி, அதிலும் தாம்பத்தியத்தில் ஏற்படும் கசந்த உணர்வுகளால் சஞ்சலங்கள் அழுத்த, ஒரு கட்டத்தில் கணவனையும், வாலிப வயது மகனையும் பிரிந்து தானாகவே வேறு மாநிலத்துக்கு மாற்றலாகிச் செல்லும் கட்டாயமும் ஏற்படுகிறது.
பெற்றோர், உடன்பிறந்தோர் சூழ்ந்த அரவணைப்பு இல்லாத வாழ்க்கையில், பல்வேறு தேவைகளுக்காகப் போராடும் ஒரு பெண்ணின் மன உளைச்சல்களும், இயல்பான நடையில் விவரிக்கப்பட்டுள்ளன.
மென்மையோடு அழுத்தமாகப் பெண்ணியம் பேசும் நாவல்; படிக்கலாம்.
கவிஞர் பிரபாகரபாபு