‘ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன... அவற்றிற்கிடையே பல நிற ரயில்களின் இடையறாத போக்குவரத்து... இறந்தவர்கள் அவற்றில் பயணிக்கிறார்கள்...
காதலின் மாதுயர் அழுந்த அற்றலைக்குள் கடவுள்... தன் நாவலை மறு உலகப் பிரசுரிக்கப் பாடுபடுகிறான் ஒரு எழுத்தாளன்...
நவீன கதை சொல்லல் முறையின் பெருவசீகர மாயம். அசாதாரண படைப்புச் சிறப்பால் தனித்தொளிரும் நாவல்.
நூலின் பின் அட்டையில் பிரசுரத்தார்களின் இந்த வாக்கியங்களோடு வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் பெரும்பாலான சாதாரண வாசகர்களின் புரிதலுக்கு ஒரு சவாலாகவே இருக்கும். ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம் பெற விரும்புவோருக்கு மட்டும் பரிந்துரைக்கப்படுகிறது.
– சிவா