விவிலிய நீதிமொழிகளின் மொழிபெயர்ப்பாக எழுந்த இந்நூல், இறையியல், தத்துவம், மெய்யியல், நட்பியல் என, பல துறைகளின் கலவையாக உள்ளது.
கிரேக்க மொழியில் உருவான கத்தோலிக்க இனத்தில் மூல ஆதாரம், விவிலியம். இதன் ஒரு பகுதியான பழைய ஏற்பாட்டில், நீதிமொழிகள் பெரும் பங்கு வகிக்கிறது. இனத்தின் வீழ்ச்சி, எழுச்சி, விடுதலைப் புரட்சி என, பல்வேறு மனப் போராட்டத்தில் இருந்த யூதர்களுக்காக அக்காலத்தே எழுந்த நீதிமொழியை, இன்றைய நிலைக்கேற்ப எளிமையான சொல்லாடல் கொண்டு இரண்டிரண்டு வரிகளாக எழுதப்பட்டுள்ளது. இந்நூல், நாவது தீயானால் நல்மாந்தரும் தீட்டு; கெடுவான் மதுவைத் தொடுவான்; விவேகி அறிவையும், விவேகமற்றவன் மதியீனத்தையும் விற்பனை செய்வான் என்பன போன்ற வரிகளைக் கொண்டு தலைப்பிற்கேற்பவே ஒவ்வொரு பக்கத்திலும் ஞானக்குறள்களை பொதிந்து வைத்துள்ளது. வாசிக்கப்பட வேண்டிய படைப்பு.
– வாலிதாசன்