‘சினிமா பார்த்து சினிமாவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால், அது சார்ந்த புத்தகங்களை படித்து தான், சினிமாவை புரிந்து கொள்ள முடியும். சினிமா என்பது, இயக்குனரின் ஒரு பார்வை மட்டுமே. புத்தகங்கள் தான், சினிமா சார்ந்த இரண்டாயிரம் பார்வைகளை கொடுக்க வல்லது’ என்பது, எஸ்.தினேஷின் ஒரு கேள்விக்கு, மிஷ்கின் அளித்த பதிலின், ஒரு பகுதியாக வருகிறது. இவ்வாறு, சினிமா பற்றிய மிஷ்கினின் பார்வையை வாசகர் முன் வைக்கும், நேர்காணல்களின் தொகுப்பு தான், ‘வினாடிக்கு 24 பொய்கள்’ நூல்.