‘ஓசை, ஒளியாய் ஆனாய் நீயே’ என்று சிவபெருமானைக் குறிப்பது உண்டு. விண்ணகத்தேவரும் எளிதில் அறியாத சிவபெருமான் ஒளியாய் காட்சி தந்த இடம் திருவண்ணாமலை. ஒளி என்பது அறிவின் அதிக மேம்பாட்டின் அடையாளம்: இருளை அகற்றி, தெளிவைத் தருவது.
ஜோதிர்லிங்கத் தலங்கள் இந்தியாவில், 12 இடங்களில் உள்ளன. நம் தென்னாட்டில், ராமேஸ்வரம் அதில் ஒன்று. இந்திய ஒருமைப்பாட்டின் முக்கிய அடையாளமும் கூட. ஆதிசங்கரர் அமைத்த ஸ்படிக லிங்கம், விவேகானந்தர் தரிசித்து, அவர் கருத்தாக,‘தூய மனமுடையோர் சிவனை தரிசிப்பர்’ என்ற தகவல்கள் இதில் உள்ளன.
கோதாவரி துவங்கும் இடத்தில் அமைந்த திரியம்பகேஸ்வரர் உஜ்ஜயினியில் உள்ள மகா காளேஸ்வரர் கோவில், அனைவரும் வாழ்நாளில் ஒரு தடவையாவது சென்று வணங்க விரும்பும் காசி விஸ்வேஸ்வரர் ஆகிய தலங்கள் பற்றிய தகவல்கள் இதில் உள்ளன.
இக்கோவில்களின் அமைவிடம், வண்ணப்படங்கள் ஆகியவற்றுடன் எளிமையான நடையில் அமைந்த விளக்கங்கள் இந்த நூலின் சிறப்பாகும்.
கிருபா