‘இம்சை அரசன் புலிகேசி’யின், 12 விட்ட சித்தப்பாவின் வம்சமாக இருந்திருக்கலாமோ என நினைக்க வைக்கிறான் கதையில் வரும் மன்னன்.
அவன் ஆளும் நாட்டில், அரண்மனை வேலை ஆட்களுக்கு கூட மூன்று மாத சம்பள பாக்கி வைக்கும் அளவுக்கு, பஞ்சம், ‘பாப் டான்ஸ்’ ஆடுகிறது.
இப்படியான சூழலில் இந்த மன்னனுக்கு ஒரு ஆசை வருகிறது. அது, நம்ம ஊர் ஷாப்பிங் மால்கள் மாதிரியான ஒரு கட்டடத்தை கட்ட வேண்டும் என்பது தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி ஒரு ஆசை, ஒரு டுபாக்கூர் மன்னனுக்கு வந்தால் எப்படி இருக்கும்... அது தான் கதை.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மாலில் சாராயக் கடை திறப்பதற்காக மன்னனுக்கும், அமைச்சருக்கும் நடக்கும் விவாதத்தில், நம், ‘குடி’களின் அரசியல் அக்கப்போர்களை கேலி செய்திருப்பது பக்கா டைமிங்.
கதைக்குள் நம்மை கூட்டிப் போக ஆசிரியர் பயன்படுத்தி இருக்கும் டெக்னிக், ‘வாவ்!’இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி படத்தில் வரும் எந்த காமெடியையும் கொஞ்சம் கூட உரசாமல் இருப்பது சிறப்பு. கடைசி பக்கத்தை மூடும் போது, நமக்கும் இந்த மன்னனின் டார்ச்சரை அனுபவிக்க ஆசை வருவதை தவிர்க்க முடியாது.