காலத்தால் அழிந்திடாத வெகு சில நுால்களில் மகாபாரதமும் ஒன்று. மானுடத்தின் மலிவான சங்கதிகளில் இருந்து, தெய்வீகத்தின் உன்னதம் வரை சகலத்தையும் இது தன் வசம் கொண்டிருக்கிறது. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இதன் மூலக்கதை தெரிந்த அளவு, கிளைக்கதைகள் பலருக்கு தெரியவில்லை.
பல துணைப்பாத்திரங்கள் அறியப்படாமலேயே வியாசரின் மூல நுாலில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களையும் பிரபலப்படுத்தி இருக்கிறது இந்த நுால். இதைப் படித்து முடிக்கையில், இவ்வளவு விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்கிறோமே என்று நிச்சயம் வியந்து போவோம்.
இது, ‘தினமலர்’ ஆன்மிகமலர் இதழில் தொடராக வெளிவந்து, வாசகர்களின் ஏகோபித்த விருப்பங்களை வாரிச்சுருட்டிய பெருமை கொண்டது.