அன்று, தியானம் என்பது பக்குவப்பட்டவர்களும், முதியவர்களும் செய்யும் ஒன்று என்ற எண்ணம் இருந்து வந்தது. இன்று, மக்கள் அனைவரும் பயிற்சி செய்யும் அளவில் பிரபலமாகிவிட்டது.
தியானத்தை இரு வகையாக பிரித்து, உடல் நலம் மேம்பாடு மற்றும் மன ஒருமைப்பாட்டுக்காக செய்வது உலகியல் தியானம் என்றும், அருவ மற்றும் உருவ உபாசனைகளில் ஈடுபடுவது ஆன்மிக தியானம் என்றும், காணக் கிடைக்காத விஷயங்களை படங்களுடன் பட்டியலிடுகிறது இந்நுால்.
முடிவு பெறும் விஷயங்களிலும், அழிவு பெறும் விஷயங்களிலும் இன்பம் இல்லை. உண்மையான இன்பம், ‘அழியாத பரம்பொருளான இறைவனிடத்தில் இருக்கிறது’ என்று, சிப்பிக்குள் முத்தெடுக்கிறார் நுாலாசிரியர்! அனைத்து வாசகர்களின் கரங்களில் தவழும் அற்புத நுால்.