ஜே.கே., என்று சுருக்கமாக அழைக்கப்படும், ஜே.கிருஷ்ணமூர்த்தி பெரும் தத்துவ ஞானி.
முற்பிறப்புகளில் புத்தரது சீடராக அவர் இருந்திருக்கிறார் என்றும், இந்த பிறவியில் உலகை உய்விக்க வந்திருக்கும் இரண்டாவது இயேசு கிறிஸ்து என்றும் அவரது அன்பர்களால் கருதப்படுபவர்.
ஜே.கே., ஒரு வித்தியாசமான சிந்தனையாளர். மனிதனை, அவனது அனைத்து தளைகளில் இருந்தும், எல்லா வகை அச்சங்களிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கம்.
அவர் புத்தகப் படிப்பை நம்புவதில்லை. வேதங்கள், கீதை, பைபிள் என்று மற்றவர்கள் மேற்கோள் காட்டிப் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர் இல்லை.
புதிதாக ஒரு மதத்தையோ, ஒரு அமைப்பையோ நிறுவ, அவர் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் அவர் தலைவராய் விளங்கிய, ‘ஆர்டர் ஆப் ஸ்டார்’ என்ற அமைப்பையே கலைத்தும் விட்டார்.
அவரது உரைகள், அவர் படித்த நுால்கள், அவரிடம் நெருக்கமாய் இருந்தவர்களிடம் நிகழ்த்திய சம்பாஷனைகள் ஆகியவற்றின் சிறிய தொகுப்பே இந்த நுால்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அருமையாக மொழியாக்கம் செய்யப்பட்டுஇருக்கிறது.
– மயிலை கேசி.