மகா புஷ்கரம் விழா கண்ட தாமிரபரணி நதிக்குப் பல பெருமைகள் உள்ளன. கரைப் பகுதிகளில் பாடல் பெற்ற சிவன், பெருமாள் கோவில்கள் அமைந்த சிறப்புக்குரியது. இந்த நதிக் கரையில், உலகப் பொதுமறை நுாலுக்கு பிழை திருத்தம் செய்யப்பட்டது மட்டுமன்றி, அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்துள்ளனர் என்பது வரலாறு.
பாபவிசை தீர்த்த மகிமை, ஐந்து வகை நிலங்களும் தாமிரபரணியும், தாமிரசபை சிற்பங்கள், தாமிரபரணி நதி உற்பத்தி புராணம், நதியோரம் கிடைத்த நாணயங்கள், தாமிரபரணி தந்த சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள்அடங்கிய பொக்கிஷம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.