பொதுவாக பெண்களுடைய பெருமையை படைக்கும், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ தன், 22வது தீபாவளி மலரை வெளியிட்டு இருக்கிறது.
நகைச்சுவை உணர்வைக் கொண்ட எழுத்தாளர் பாக்கியம் ராமசுவாமியின், ‘நாஸல் ஸ்பிரே’ அருமையான படைப்பு.
கால வரையறைக்கு முந்தையது சிவலிங்க வழிபாடு, கிராம தேவதைகளில், ‘மாஇசக்கி’ உட்பட பல்வேறு அருள் தெய்வங்கள், திருமுருகாற்றுப்படை துவங்கி, நாட்டில் உள்ள சமய நுால்கள் என்ற கட்டுரைகள், பல தகவல்களை கொண்டிருக்கின்றன.
காசி யாத்திரை குறித்து பாஸ்கரன், பத்மினியின், ‘டிசைனர்’ என்ற சிறுகதைகள் உட்பட பல படைப்புகள் மலரில் இடம் பெற்றிருக்கின்றன.
கவிமாமணி இளையவன், திருப்புகழ் மணிவண்ணன் ஆகியோரது கவிதைகளும் இம்மலருக்கு அழகு சேர்க்கின்றன. பாரதத்தின் மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப நம் விவசாயம் வளர்கிறது என்பதை, ‘இயற்கை வளம்’ படம் பிடிக்கிறது. வண்ணப் படங்களுக்கும் மலரில் பஞ்சமில்லை.