‘புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதியாரால் போற்றப்பட்ட கம்பருக்கு ஏற்றம் தந்தது, அவர் இயற்றிய, ‘ராமாவதாரம்’ என்ற ஒப்பற்ற காவியம். பிற்காலத்தில் அக்காவியத்தை, ‘கம்ப ராமாயணம்’ என்று வழங்கினர்.
இந்நுால் கம்ப ராமாயணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களுக்கு அருமையான விளக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது.
‘அஞ்சிலே ஒன்று பெற்றான்’ என்ற பாடலுக்கு வினா – விடை மூலம் விளக்கம் தருவதும் (பக்., 45), அயோத்தி நகர் குறித்த கம்பர் பாடலை விளக்குவதும் (பக்., 57), ‘எண்ணிலா அருந்தவத்தோன்’ பாடலை அழகாக விளக்குவதும் (பக்., 81), ‘நவ்வி வீழ்ந்தென’ பாடலுக்கு நயவுரை கூறுவதும் (பக்., 173), கோதாவரி நதி குறித்த கம்பர் பாடலுக்கு விரிவுரை தருவதும் (பக்., 225), வாலியை ராமன் கொன்றது சரியே என்று நுாலாசிரியர் தெளிவாகக் கூறுவதும் (பக்., 393) சிறப்பானவை. தெளிவான அச்சும், எளிய நடையும் நுால் படிப்போருக்கு இன்பம் தரும். நல்ல அருமையான நுால்.
– பேரா., டாக்டர் கலியன் சம்பத்து