சுதந்திர போராட்டத்தில் நடந்த சம்பவங்களை பற்றி கதைகள் வருவது இப்போது அபூர்வமாகிவிட்டது. அந்த குறையை தீர்க்கும் வகையில், ஆசிரியர் வித்யா, இந்த நாவலை எழுதியுள்ளார். நிகழ்காலத்தையும், சுதந்திர போராட்ட காலத்தையும் இணைத்து அவர் எழுதியுள்ளது மிகச் சிறப்பு.
உப்பு சத்யாகிரக போராட்டத்தில் துவங்கி, பாரத பிரிவினை வரை அவர் எழுதியுள்ள சம்பவங்களை படிக்கும் போது, நம்மை அக்காலத்துக்கே கொண்டு சென்று விடுகிறது, பிரிவினையின் போது, ஹிந்துக்கள் பட்ட கஷ்டங்களை படிக்கும் போது, நம் கண்கள் குளமாகின்றன.
கல்யாணராமன் கதாபாத்திரம், நம் நெஞ்சில் நிழலாடுகிறது. தேசபக்தி உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நுால் இது.
– சா.சுப்பு