உலக உயிர்கள் உய்யத் தாமே ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமானின் அழகிய தோற்றத்தை நுவல்கிறது, ‘கண்ணி கார்நறுங் கொன்றை!’ மேலும், ‘சுடுசொல் சொல்லேல்’ எனும் சிறுகதையில், பிறரை மட்டந்தட்டி பேசுவதிலும் நயத்தக்க நாகரிகம் வேண்டும் என்பதை, அரசியல் மேடைகளிலும், பட்டிமன்றங்களிலும் அலங்கரிக்கும் பேச்சாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் நுாலாசிரியர்.
‘சுதந்திர மாண்பு, பட்டியலும் பாட்டியலும், எதிர்பாராத நிகழ்ச்சி, மெய்யும் பொய்யும், வாழை இலை, திருட்டுச் சாப்பாடு, கோட்டில் போட்ட ரோடு, குங்குமத்தைப் பெற்றுவந்த சந்தனம்’ உள்ளிட்ட சிறுகதைகள், நல்ல படிப்பினை கற்பித்து நல்வழிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
– மாசிலா இராஜகுரு