பேச்சு என்பது உலக அளவில் ஒரு கலையாக உருவான போது, ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி, அரசியல், புரட்சி, சமயம், நீதி போன்ற துறைகளில் மாற்றங்களை உருவாக்க, மகத்தான பேச்சாளர்கள் உலக அளவில் உருவாகினர்.
உலக அளவில் மகத்தான பேருரைகள் ஆற்றிய தத்துவ ஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுனர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என, 25 நபர்களின் பேருரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
இப்பேருரைகள் தனிமனித வளர்ச்சிக்கும், நாட்டுக்கும், நீதிக்கும், மக்கள் உரிமைக்கும் ஆற்றிய சுயநலம் இல்லாத பேருரைகள்.
இப்பேருரையாளர்களின் தியாகமும், படிப்பும், பேச்சும், பதவியும் மக்களை முன்வைத்தே பேசப்பட்டுள்ளன. இப்பேருரைகளின் தொகுப்பு பேச்சாளர்களுக்கும், சட்டசபை லோக்சபா உறுப்பினர்களுக்கும் பெரிதும் பயன்படும்.