கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன் கவிதைகள் எதார்த்தங்களின் வெளிப்பாடாகவே விளங்குகின்றன. இவரின் கவிதைகள் எளிய நடையில் அமைந்திருந்தாலும் கனமான கருவுடன் உணர்வுகளின் தாக்கங்களை வெளிப்படுத்துகின்றன.
ஒவ்வொரு பொழுதுகளும் துாசி பறக்க விடுவது, பெண்களின் வாழ்வில் சுமை மற்றும் சடங்காகவே விளங்குவதை புலப்படுத்துகிறார் கவிஞர்.
கன்னி கழியவில்லை, கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன், சுட்டுவிரல், சாட்சியங்கள் போன்ற கவிதைகள் கவிஞரின் ஆவேசத்தை வெளிப்படுத்துகின்றன.
கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன் என்னும் இந்நுால், புதுக்கவிதை உலகில் தனித் தடத்தை பதியச் செய்யும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
– முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்