ஆசிரியர்-வ.ரஹ்மத்துல்லா. வெளியீடு:கே.கே.புக்ஸ் பி.லிட்., 19, சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்),தியாகராயர் நகர்,சென்னை-17.பக்கங்கள்:144. தெருக்களில் மக்களிடத்து இரவல் கேட்டு வாங்கி உண்ணுகின்ற இரவலர்கள் பலதரப்பட்டவர்கள். அவர்களுள் இஸ்லாமிய இரவலர்களாகிய ஃபக்கீர்கள் சற்று வேறுபட்ட நிலையில் தம் சமயம் சார்ந்த நீதிக் கருத்துக்களை மக்களுக்கு நினைவூட்டும் பொருட்டு தெருக்களில் பாடிச் சென்று இரப்பவர்களாக இருக்கிறார்கள். தான் நம்புகின்ற தெய்வத்தின் கதையினை,செயல்களை புகழ் புராணமாக இசை உணர்வோடு,எடுத்துச் செல்லுவதில் மட்டுமல்ல சமூக நல்லிணக்கத்தின் பதிவுகளாகவும் ஃபக்கீர்கள் பாடல்கள் அமையும்.அவர்கள் குறித்து இதுவரை முழு அளவில் ஆய்வுகள் இல்லாத குறையை ரஹ்மத்துல்லாவின் உழைப்பு நீக்குகிறது.