சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. 16 பெண் எழுத்தாளர்களின் படைப்புகள், மன உணர்வின் பல்வேறு சாயல்களை பிரதிபலிக்கின்றன. அலைமோதும் நினைவுகள், உருகி ஓடும் தார், சாலையில் பள்ளங்களை நிரப்பி சமன் செய்வது போன்ற உணர்வை தருகின்றன. நினைவின் அலைகளாக, வாழ்வின் சிறகுகளாக மிளிர்கின்றன. – விஜயலட்சுமி