திருப்புகழுக்கு ஆனந்த அனுபவ உரை எழுதி விளக்கியுள்ள நுால். காமத்தை விரட்டி, குருவாக நின்று ஞானத்தை அறிய வைப்பான் கந்தன் என்பதை, கந்தர் அநுபூதியால் விளக்கியுள்ளார். ஆதிசங்கரர், திருச்செந்துார் கடற்கரையில் செந்தில் ஆண்டவனின் பேருருவைக் கண்டு பாடிய சுப்ரமணிய புஜங்கத்தையும், அதன் மொழியாக்கக் கவிதையும் தந்து காட்சிப்படுத்தியுள்ளார்.
தேர்ந்த வடமொழி அறிவும், கவிதை ஆற்றலும், பன்னுால் ஒப்பிலக்கியத் திறனும் கலங்கரை விளக்கமாய் ஒளிர்கிறது. திருப்புகழில், அருணகிரிநாதருக்கும், முருகனுக்கும் உள்ள தோழமையை, கீதை சொன்ன கண்ணன் – அர்ச்சுனன், மாணிக்கவாசகர் – சிவன் நட்புகளோடு ஒப்பிடப்பட்டுள்ளது. மனத்தை உருக்கும் திருப்புகழுக்கு எழுதியுள்ள விளக்கம் அருள் ஆனந்தம் தரும்.
– முனைவர் மா.கி.ரமணன்