பெங்களூரு பெயர் மாற்றத்துடனும், கால மாற்றத்துடனும் துவங்கும் இந்த நாவலின் கதை, மாலதி என்னும் முதன்மைப் பாத்திரத்தின் மனத்தில் ஏற்பட்ட மாற்றத்துடன் நிறைவடைகிறது.
தற்காலத்தில் மிகவும் மலிந்து போன போலி டாக்டர் முதலான தகவல்கள் அனைத்தையும் துப்பறியும் நாவல் போக்கில் கதையாக வளர்த்துச் செல்கிறது நாவல். எடுத்தால் படித்து முடிக்காமல் வைக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு எளிமையாக உள்ளது.
சிறிய அளவிலான, 40 அத்தியாயங்களில் நகர்த்திச் சென்றுள்ளார், ஆசிரியர். ஆடிட்டிங் சம்பந்தமான ஆங்கிலச் சொற்கள் பலவும் சரளமாக இடம்பெற்றுள்ளன.
‘லோரி’ என்னும் நாயையும் பாத்திரமாக்கியுள்ள நுட்பம் பாராட்டத்தக்கது. தேவைக்கு ஏற்ப படங்கள் கறுப்பு வெள்ளையில் அமைத்துள்ளார், பதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன். தரமான தாளில் வெளிவந்துள்ளது. குறைந்த நேரத்தில் படிப்பதற்கான நாவல்.
– முகிலை ராசபாண்டியன்