சிவ புராணம், கீர்த்தித்திரு அகவல் பிரிவுகளுக்கு பாடலைப் பிரித்து, அரும்சொல் விளக்கம் தந்து விளக்கவுரையை குறிப்புகளுடன் எழுதி உள்ளார். நால்வர் நான்மணி மாலையிலிருந்து மாணிக்கவாசகர் பற்றிய 10 பாடல்களை வெளியிட்டதோடு, அவர் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மாணிக்கவாசகர் குறிப்பிடும் பிறப்புகளை இரு வகைகளாக விளக்கியிருப்பது அருமை. ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை வகைப்படுத்தி தரப்பட்டுள்ளன.திருவாசக உரைகளை ஆய்ந்து அரிய செம்பொருள் விளக்கம் தந்துள்ளார். கீர்த்தித் திரு அகவல் பகுதியில் சிவபெருமானின் பெருமை விளக்கப்படுகிறது. திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்னும் வாக்கை உணரலாம்.
– பேராசிரியர் இரா.நாராயணன்