தமிழகத்தின், கடலோரத்தில் மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்டு வாழும் மக்களின் உயர்ந்த பண்பாட்டை சொல்லும் நுால். மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பயன்படுத்தும் கலைச் சொற்கள், மீன்களின் பெயர்கள், கடல் பாறைக் கூட்டங்களின் பெயர், கடலுக்கு அமைந்த பெயர்கள், நெய்தல் சமூகங்களின் பண்பாட்டு உயர்வு, நட்சத்திரங்களை அடையாளம் காணும் விதம், கடலில் வீசும் காற்றின் வகைமைகள், கடலோர பழமொழிகள், கடல் தொழிலுக்கு உதவும் கருவிகள், மீனவப் பெண்களின் விளையாட்டுப் பாடல்கள், விடுகதைப் பாடல்கள், வசவுப் பாடல்கள் உட்பட, 31 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.
மீனவ சமூகத்தின் உயர்ந்த பண்பாட்டை விரிவாகப் பேசுகிறது. குழுவாக ஆராய்ந்து தொகுக்க வேண்டிய பணியை, தனியொருவராக நிறைவேற்றியுள்ளது வியப்பு தருகிறது. நுால் உருவாக்கத்தில் கடும் உழைப்பு தெரிகிறது. நெய்தல் பண்பாடு பற்றி அறிய உதவும் முழுமையான நுால்.
– அமுதன்