யோகா மற்றும் தியானத்தின் நன்மைகள் பற்றி விளக்கி எழுதப்பட்டுள்ள நுால். சித்தர்களின் அறிமுகத்துடன் துவங்குகிறது. அடுத்து மாணவர்களுக்கு உதவும் யோகக் கலை பற்றி எழுதப்பட்டுள்ளது. அது எவ்வாறெல்லாம் உதவும் என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது. தியானம் பற்றி தனியாக எழுதியுள்ளார். திருமந்திரத்தின் சிறப்பு பற்றியும் விளக்கப்பட்டு உள்ளது. கடைசியாக, கிரியா மற்றும் ஆசனங்களும் விளக்கப்பட்டுள்ளன.