அரசு மற்றும் அரசு துறைகள் சார்ந்த அலுவலர்களின் செயல்பாடுகளை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தகவல் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கேட்கும் தகவல்களை முறையாக தருவதற்காக, துறை வாரியாக பொது தகவல் அலுவலர்களை நியமிக்கிறது அரசு. அந்த அலுவலர்களின் கடமைகளையும், பொறுப்பையும் விளக்கும் நுால்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் துவங்கி, பொதுத்தகவல் அலுவலரின் கடமைகள், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் முக்கிய பிரிவுகள், அது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம், முக்கிய தீர்ப்புகள், மேல்முறையீட்டுக்கான வழிமுறைகள் பற்றி விரிவாக தரப்பட்டுள்ளது.
நில அளவை தொடர்பான ஆவணங்கள், அவை பாதுகாக்கப்படும் அலுவலகங்களின் விபரங்கள் உட்பட, 10 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்களில் இருந்து முக்கியத் தகவல் பெறுவதை எளிமையாக விளக்குகிறது. தமிழகத்தை மேலும் ஜனநாயகப்படுத்த இந்த புத்தகம் உதவும்.
– அமுதன்