வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வீகமான, மகா பெரியவா சுவாமிகளின் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதையை உணர்வுப்பூர்வமாக, அறிவுரைகளை அறிவுப்பூர்வமாக பதிவு செய்துள்ள நுால்.
‘சன்னியாசிதான், ஞானியாக இருக்க முடியும் என்பதில்லை. ஒரு சண்டாளன்கூட ஞானியாக இருக்கும் பட்சத்தில் அவனே என் குரு’ என்ற ஆதிசங்கரர் கருத்தும், ‘உன் பேஷன்ட்டுகளுக்கு மருந்து எழு திக்கொடு; கூடவே, அடியில் தினமும் ரெண்டு வேளை சகஸ்ரநாமம் சொல்லணும்னு எழுதிக்கொடு...’ என்ற மகாபெரியவர் அறிவுரையும் சிறப்பு.
‘சங்கீதத்தில் த்வைதமோ, அத்வைதமோ பேதமில்லை’ என்ற சங்கீத ஞானவுரையும் பால்பிரண்டன், காமராஜர், சேஷாத்ரி சுவாமிகள் இப்படி எத்தனையோ பேர் பற்றிய தகவல் களைத் தொகுத்து நயமாக வடித்துள்ளார். புத்தகம் முழுதும் மகாபெரியவா பற்றி, அவரை சிறப்பிக்கும் கேஷவ் ஓவியங்கள் அற்புதமாக அமைந்துள்ளன. தரமான படைப்புடன் தயாரிப்பும் சிறப்பாக உள்ளது.
– பின்னலுாரான்