மகாகவி பாரதி எழுதிய குறுங்காவியமான பாஞ்சாலி சபதத்தை நாடக வடிவில் தரும் நுால். இந்திய விடுதலைப் போரில் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த குறுங்காவியத்தைப் புனைந்தார் பாரதி. அதை, மாணவ – மாணவியர் நாடகமாக நடிக்க ஏற்ற வடிவில் உருவாக்கியுள்ளார்.
கல்லுாரியில் படித்த காலத்தில், அதை நாடகமாக நடித்தது பற்றிய சுவாரசிய அனுபவத்தையும் முன்னுரையில் பதிவு செய்துள்ளார். வாசிக்கவும், அரங்கில் நடிப்பதற்கும் ஏற்ற நுால்.