ரஷ்ய எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள், அதன் நோக்கங்கள் என 15 தலைப்புகளில் பதிவு செய்து உள்ள நுால்.
சான்றாக, மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலில், ‘தொழிலாளர்களிடம் ஒரு மகாசக்தி மறைந்து கிடக்கிறது. அவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவர்களது மதிப்பையும் சக்தியையும் அவர்களை உணரச்செய்ய வேண்டியதே முக்கியம். அதை உணர்ந்துவிட்டால் அவர்கள் உடனே சுதந்திரமாக வளர்ச்சி பெறத் துவங்குவர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகிலேயே ஏழைத் தாயைக் கதாநாயகியாக்கி எழுதப்பட்ட வர்க்கப் போராட்ட நாவல் இது. இன்று வரை உலகின் முதல் வர்க்கப்போராட்ட நாவல் என்று போற்றப்படுகிறது. உலகின் முதல் பாட்டாளி வர்க்க நாயகர்கள், நாயகியரை மாக்சிம் கார்க்கி வீரியமாய் அறிமுகம் செய்துள்ளது.
மார்க்சிய அறிஞர்களின் கருத்துகளை, பழங்களைச் சாப்பிடச் சிரமப்படும்போது பழச்சாறு எவ்வாறு உதவியாக இருக்குமோ அதுபோன்ற ரஷ்ய மூல நுால்களை வாசித்த பயனை தருகிறது இந்த நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்