பெரியபுராணத்தில் வரும் அறுபத்து மூவரின் சரிதங்களை எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால். எவரும் புரிந்து கொள்ளக்கூடிய உரை நடையில் படைத்துள்ளார்.
துவக்கத்தில் சுந்தரர் வடித்த திருத்தொண்டத்தொகை பதிகத்தை நம்பியாண்டார் நம்பி வகைப்படுத்தியது தரப்பட்டு உள்ளது.
நோயில் துடித்தும், சுண்ணாம்புக் கால்வாயில் வருத்தியும் மீண்ட நாவுக்கரசர், கண்ணிழந்தும் சிவத்தொண்டு தொடர்ந்த சுந்தரர், கோவில் கதவு திறக்கவும் மூடவும் அப்பருடன் சேர்ந்து பதிகம் பாடிய சம்பந்தர், கண்ணைப் பிடுங்கி சிவனுக்கு அப்பிய கண்ணப்பனார், மனைவியால் விலக்கி வைத்த திருநீலகண்டர் என எளிய நடையில் கதைகள் அமைந்துள்ளன.
வணிகர், வேளிர், வேடர், வேளாளர், ஆயர், பாணர் எனப் பலரும் இறையருள் பெற்று நாயன்மாராகப் போற்றப்பட்டதை கூறுகிறது. சிவத்தொண்டு செய்ய பல்வேறு அணுகுமுறைகளை கடைப்பிடித்த நாயன்மார்களின் பயணம், வீரம், கண்டிப்பு, கருணை சார்ந்த கதைகள் மனதை வருடுகின்றன.
– மெய்ஞானி பிரபாகரபாபு