முகப்பு » ஆன்மிகம் » இறையுரையிசை (பகவத்

இறையுரையிசை (பகவத் கீதை)

விலைரூ.100

ஆசிரியர் : ஹரிஹரன்

வெளியீடு: சோலைப் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஹிந்து மதத்தின் உயரிய புனித நுால் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. பகவத் கீதை என்ற சொல்லுக்கு மாற்று வடிவமே, ‘இறையுரையிசை’ என அமைத்துள்ளார் நுாலாசிரியர். 18 அத்தியாயங்களில், 701 சிந்தியல் வெண்பாக்களால் அமைந்துள்ளது.

 அர்ச்சுனன் மகாபாரதத்தில் குருஷேத்திரப்போர் துவங்கும் முன், எதிரணியைப் பார்வையிட்டான். அவ்விடத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இருப்பதைக் கண்டு போரிட மறுத்து கிருஷ்ணரிடம் உரையாடினான்.

அர்ச்சுனனின் தேரோட்டியான கிருஷ்ணர் தர்மத்திற்காகப் போரிடுகையில் உறவு முறைகளை, நட்பை, ஆசிரியரைப் பார்க்கலாகாது என்றார். அவ்விளக்கத்தில் சொன்ன தத்துவங்கள், யோகநிலைகள் போன்றவையே எளிய வெண்பாக்களால் புனையப்பட்டுள்ளன. வாழ்க்கைக்குரிய தத்துவ சாரத்தை வழங்கியுள்ளமை சிறப்புடையது.  

முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

Mi4 - Chennai,இந்தியா

புத்தகம் வேண்டுவோர் 9600013331 என்ற எண்ணைக் தொடர்பு கொள்ளவும் 15042022 க்குப் பிறகு தொடர்பு கொள்க If you wish to get a copy of the book please contact after 15042022 in phone number 96000 13331

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us