ஜென் தத்துவ விளக்கக் கதைகளைக் கொண்ட நுால். சாதிக்க நினைத்தால், சட்டென்று பாரத்தை இறக்கி போடத் தயாராக இருக்க வேண்டும். பாரத்தை சுமந்து கொண்டு ஒருபோதும் மேன்மை நிலையை அடைய முடியாது போன்ற பொன்மொழிகள் நிறைந்தது.
நாளைக்கு மறைந்து விட்டால், மனைவி என்ன ஆவாள், கணவர் என்ன ஆவார், குழந்தைகள் என்ன ஆகும்... இப்படிப்பட்ட கேள்விகள் உள்ளன. அதனால் உண்மையில், யாருக்கும் எதுவும் நேர்ந்துவிடாது. சில முட்டாள்கள் வீறிடுவர்; சிலர் அழுவர்; அவர்களும் இறந்து போவர். சிலர் வாழ்நாளுக்காக செய்து கொள்ளும்
ஏற்பாடுகளைப் பார்த்தால், பூமியில் நிரந்தரமாக தங்க வந்தது போல் தோன்றும்; அது வடிகட்டின முட்டாள்தனம். மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை; அனைவரும் சமம். அவரவர் வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். அது மற்றவருக்கு இடையூறு தராத வகையில் இருக்க வேண்டும் என தெளிவாக சொல்கிறது. ஜென் தத்துவங்களை வலியுறுத்தும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்