தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி போட்டவர்களில் ஒருவர் கருணாநிதி. 50 ஆண்டுகள் இயக்க தலைவர், முதல்வர், சினிமா, எழுத்து என, பன்முகத் தன்மையுடன் செயலாற்றியவர். தமிழகம் தனித்துவமாக நிற்க இவர் ஒரு காரணமாக இருந்தாலும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். இவர் குறித்து, 32 தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ள நுால்.
திருவாரூர், திருக்குவளையில் துவங்கிய கருணாநிதி வாழ்க்கையில் இருந்து, அவரது மகன் ஸ்டாலின் முதல்வர் ஆனது வரை, சுவாரசியத்தோடு படைக்கப்பட்டுள்ளது.
அண்ணாதுரையுடன் இருந்த நட்பு, காமராஜர் மீதிருந்த மரியாதை, எம்.ஜி.ஆர்., மீது ஏற்பட்ட கோபம், ஜெயலலிதா காட்டிய அரசியல் பகை, காங்கிரஸ், பா.ஜ., மீதிருந்த நெருக்கம், தேசிய தலைவர்களுடன் கைகோர்ப்பு என, கருணாநிதியின் அரசியல் பாதை விளக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் அரசியல் பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்