திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் மங்களா சாசனம் செய்த வைணவத் தலம் சாளக்கிராமம். பனி படர்ந்த நேபாள இமாலய பகுதியின் அடிவாரத்தில், கண்டறிய முடியாத நிலையில் இக்கோவில் இருந்தது.
கர்நாடக மாநிலம், மேல்கோட்டை மணவாள மாமுனி மடத்தின், 23ம் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், பத்தாண்டு தேடலில், பலவித இன்னல்களை ஏற்று, இக்கோவிலை கண்டறிந்து நிர்ணயம் செய்துள்ளார். இங்கு, தாமோதர கண்ணன் கோவிலையும் எழுப்பியுள்ளார். சக்ர தீர்த்தம், தாமோதர தீர்த்தம் இங்கு உள்ளன.
விசிஷ்டாத்வைதம் பற்றியும், ராமானுஜர் பற்றியும் எழுதியுள்ள முன்னுரை தெளிவாக உள்ளது. அடுத்து, நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைத் தொகுத்த நாதமுனிகள் அறிமுகம், பன்னிரு ஆழ்வார்கள் பற்றிய அழகான குறிப்புகள் தொடர்கின்றன.
தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள், இறுதியில் பட்டியல் இடப்பட்டுள்ளன. 108 திவ்ய தேசங்கள் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. திவ்ய தேசங்களில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள சாளக்கிராமம் பற்றிய தேடலைக் கூறும் ஆய்வு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்