கடமையாகச் செய்வது, நிறைவை தருகிறது. கடனுக்கு செய்வது, குறையை சுட்டிக் காட்டுகிறது என்ற கருத்தை கொண்டு விளக்கும் நாவல். ‘வாழ்க்கைக்கு தேவை பொருளாதாரம். அது எந்த அளவுக்கு நமக்கு கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு துயரங்களை விரட்டுகிறது’ என்ற கருத்தை வலியுறுத்துகிறது. சமூக நாவலில், இதுபோன்ற கருத்துக்கள் ஆங்காங்கே சொல்லப்படுகின்றன.
அளவுக்கு அதிகமான கதாபாத்திரங்கள் உள்ளன. கணவனின் ஆதரவு, ஒரு பெண்ணுக்கு அவசியம் தேவை என்ற மையக் கருத்து உள்ளது. – சீத்தலைச்சாத்தன்