தமிழக வரலாற்றை புதிய கோணத்தில் அணுகி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால்; முற்றிலும் வித்தயாசமான தகவல்களுடன் உள்ளது.
தமிழ், வீடும் வாழ்வும், தைப்பூசம், பல்லாங்குழி, தமிழக பவுத்த எச்சங்கள், பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும், கறுப்பு என்ற தலைப்புகளில் கட்டுரைகள் வரையப்பட்டுள்ளன. எல்லா பொருண்மைகளிலும் அறிந்த செய்திகளை, அறியாத கோணங்களில் நின்று துலக்கி புரிய வைக்கின்றன; பேசு பொருட்களுக்கு உரிய ஆதாரங்களை திரட்டித் தருகின்றன.
தமிழ் மொழியை, வாழ்வு, கலாசாரம், பண்பாட்டை நுட்பமாக அணுகி கருத்துகளை வெளிப்படுத்துகிறது. தகவல்களுக்குள் தகவலாக உள்நிறைந்து விரிகிறது. நிகழ்வுகளுக்கு பின்னணியில் இருந்த செயல்களை சுட்டிக்காட்டி சுயம் சார்ந்த அறிமுகத்தை செய்கிறது. தமிழக பண்பாட்டு பின்னணியை தரவுகளுடன் நிறுவும் நுால்.
– ராம்