பேரண்டம் தோன்றியது குறித்த ஆய்வு தகவல்களை தொகுத்துள்ள எளிய வானவியல் நுால். இந்தியர், சுமேரியர், பாபிலோனியர்கள் ஆண்டொன்றில், 360 நாட்கள் கொண்டதாகக் கணித்தது, தொடர்ந்து 360 பாகை (டிகிரி) பிறந்தது, ஒவ்வொரு பாகையும் ஒரு கதிரவ நாளாகக் கருதப்பட்டது, மத்திய அமெரிக்க இனத்தினர், ஒரு ஆண்டில் 365 நாட்கள் என்று கண்டது போன்ற அரிய தகவல்களைக் குறிப்பிட்டு, விண்மீன் கணிப்பின் தொடர்ச்சியாகவே ஜோதிடம் தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது.
பேரண்ட அமைப்பு, இயல்பு மற்றும் இயக்கத்தை, அரிஸ்டாட்டில் எவ்வாறு தத்துவார்த்த முறையில் பார்த்தார் என்பதும், வானவியலாளர்கள் வான் பொருட்களின் நகர்வுகளை, எவ்வாறு அவதானித்தனர் என்பதும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
நியூட்டனின் கண்டுபிடிப்புகள் மற்றும் பேரண்ட வடிவம், விரிவடைந்து வரும் பேரண்டம், உள்ளடங்கிய வாயுக்கள், துாசு, எரி கற்கள், உயிரினங்கள் என, பல தகவல்கள் சுவாரசியம் தருகின்றன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு